×

உதை வாங்காமல் போயிருக்கிறான்.. நடுநடுங்கி அச்சத்தில் உளறி கொட்டும் ஆர்.எஸ்.பாரதி...

 

அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறி கொட்டுகிறார் ஆர். எஸ். பாரதி.   அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள். இன்னும்  வேதனைப்படுவீர்கள்;வெட்கப்படுவீர்கள் என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

திருவாரூரில் உள்ள ஒரு தெருவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று திமுக முடிவு எடுத்தது  ஆனால் இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது.   இதன் பின்னர் கருணாநிதி பெயர் சூட்டும் திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது.

 இந்த நிலையில் திருவாரூர் தெற்கு வீதியில்  திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பங்கேற்று பேசினார்.   கி. வீரமணி,  சிபிஎம் பாலகிருஷ்ணன்,  சிபிஐ முத்தரசன்,  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆர். எஸ். பாரதி பேசியபோது,   பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.   திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர்  பெயரை சூட்டக்கூடாது என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.   இந்த இடத்தில் அப்படி பேசிய அண்ணாமலை உதை வாங்காமல் போய் இருக்கிறார் என்றால் அதனை நினைத்து வெட்கப்படுவதாக தெரிவித்து இருந்தார்.


 
இதுகுறித்து நாராயணன் திருப்பதி,  திருவாருர் வீதியிலே வந்து கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், நான் வேதனை படுகிறேன், இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தி மு க அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசிய பேச்சை குறிப்பிட்டு,

’’அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறி கொட்டும் ஆர். எஸ். பாரதி அவர்களே, அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள். இன்னும்  வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள் இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள்’’ என்கிறார்.