×

ஓபிஎஸ் கட்சியைவிட்டு அகற்ற வேண்டும் என்ற சசிகலாவின் சத்தியம் நிறைவேறியது!

 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்திக்க புதுச்சேரி  அதிமுக கிழக்கு செயலாளர் ஆ.அன்பழகன் வந்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் 11ம் தேதி அதிமுக  பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். 

நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார், அதிமுகவின் பொருளாளர் பன்னீர்செல்வத்திற்கு தான் அதிகாரம் உள்ளது  என வைத்திலிங்கம் கூறுகிறார். அவருக்கு மூளை குளம்பியுள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா செயலிழந்தது போல், பன்னீர் செல்வமும் செயலிழந்து விடுவார். 

பன்னீர் செல்வம் மகன் திமுக தலைவரை சந்தித்து சிறந்த முதலமைச்சர் என வாழ்த்துக் கூறுகிறார். திமுகவை புகழ்ந்து பேசி அதிமுக தொண்டர்கள் நெஞ்சை பன்னீர் செல்வம் புண்படுத்திவிட்டார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி வந்த போது தனக்கு வேண்டும் என்றார், எதிர்க்கட்சி தலைவராக வந்த போது தான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என முயற்சி செய்தார். கட்சியில் கூட இரட்டை தலைமை ஏற்பட ஓபிஎஸ் தான் காரணம், மேலும் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவிற்கு செய்த ஏராளமான துரோகம் செய்து விட்டார். தற்போது ஓபிஎஸூ, வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகர், மனோஷ் பாண்டியன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே அவர் ஒருங்கிணைப்பாளர் என்றார். 

சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மூன்று சத்தியம் செய்தார். அதில் முதலாவது சத்தியம் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் கட்சியை விட்டு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது தான். சசிகலாவின் முதல் சத்தியம் தற்போது நிறைவேறிவிட்டது, அந்த சத்தியம் மட்டுமே நிறைவேறினால் எங்களுக்கு போதும்.  நாங்கள் பணம் கொடுத்து 23 தேதி பொதுக்குழுவிற்கு நிர்வாகிகளை எங்கள் பக்கம் அழைத்து இருந்தால் கையும் களவுமாக அதனை நிரூபிக்கலாம், நாங்கள் யாரையும் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கவில்லை” என்றார்.