×

அதிமுக பொதுக்குழு ஒத்திவைப்பா? நீதிமன்றத்துக்கு செல்லும் அதிமுக பிரச்சனை

 

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்கும், வகையில்  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத்தலைமை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை .எனவே  எடப்பாடி தரப்புக்கு செக் வைப்பதற்காக சட்ட வல்லுனர்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இதுதவிர சட்டம் ஒழுங்கு பிரச்சனையை  ஏற்படுத்தி பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சசிகலாவின் தரப்பை சேர்ந்த சிலர், ஓபிஎஸ்சை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது சசிகலா தரப்பில் இருந்து சில உதவிகளை ஓபிஎஸ் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. அவர்களும் அதற்கு ஓகே சொல்லியுள்ளனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றினால், அதே செல்லாக் காசாக ஆக்குவதற்கான வேலையிலும்  ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. சட்டரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பக்கபலமாக இருப்போம் என சசிகலா தரப்பு உறுதியளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழுவை நடத்த தடைகோரி ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறப்படுகிறது. இருதரப்பும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்வது, அதை அறிக்கையாக வெளியிடுவது, அடிதடி ஈடுபடுவதால் பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது