×

#JUSTIN கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய தயார்; ஈபிஎஸ் தயாரா?- ஓபிஎஸ்

 

எடப்பாடியும் ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்கிறேன் மக்கள் மத்தியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நமது செல்வாக்கை பார்ப்போம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.


அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்ன் பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்- இன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன்படி இன்று, மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சிவா, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, திருப்பரங்குன்றம் வடபழஞ்சி குபேந்திரன் திருமங்கலம் நகர பொறுப்பாளர் ராஜாமணி கள்ளிக்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்  தலைமையில், அந்த மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீர்செல்வம், “பதவியை நான் ராஜினாமா செய்கிறேன், எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா? எடப்பாடி ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்ய தயார். கீழே போய் தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு இதனை நான் தெரிவிக்கிறேன். கவுரமான  பொதுக் குழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி தன்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது, நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது, நான் பேசினால் யாரும் பேச முடியாது” என விளாசினார்.