×

சசிகலாவை பொதுச்செயலாளராக்கியது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்

 

 

கட்சியை வழிநடத்த தற்காலிகமாகவே சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகவே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு மூல காரணம் தொண்டர்கள்தான். ஒற்றைத் தலைமை தேவையா? இல்லையா? என்பது குறித்த தனது கருத்தை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். ஒற்றைத் தலைமை பிரச்சனையை எழுப்பியவர்களை ஈபிஎஸ் கண்டிக்க வேண்டும்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை. ஒற்றைத் தலைமை பேச்சால் மிகப்பெரிய வருத்தம்.  உச்சபட்ச அதிகாரத்தில் நான் இருக்க வேண்டும் என எந்த காலத்திலும் நான் கேட்டதில்லை. விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. தொண்டர்கள் மீது சிக்கலான கருத்துகளை திணித்து அவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பொதுக்குழுவை சுமூகமாக நடத்திவிட்டு, அடுத்த கட்டம் குறித்து 14 பேர் கொண்ட குழு பேசி முடிவு செய்யட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் கட்சியிலிருந்தும் பொறுப்பிலும் விலக யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது” எனக் கூறினார்.