×

ஓபிஎஸ் செல்லாத நோட்டு - இபிஎஸ் கள்ள நோட்டு : ஆதரவாளர்கள் மோதல்

 

ஓபிஎஸ் செல்லாத நோட்டு என்று எடப்பாடி அணி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா சொன்ன கருத்துக்கு , இபிஎஸ் ஒரு கள்ள நோட்டு என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்ல செல்வராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

எடப்பாடி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய போது,  அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.  அதே மாதிரி ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் மீண்டும் அவரை இணைப்பது என்பது சத்தியமே இல்லை.  எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. அதிமுகவை பொறுத்த வரைக்கும் ஓபிஎஸ்ஐ செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாகத்தான் பார்க்கிறோம்.  அவருடன் யாரும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.

இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

 அப்போது ராஜன் செல்லப்பா, ’’ஓ. பன்னீர்செல்வம் குறித்து செல்லாத நோட்டு என்று தவறாக பேசியிருக்கிறார் .  எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.   அவர் மேலும் ,   ‘’பிரதமர் மோடி மதுரை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆங்கிலத்தில் பேசியதை பெரிய பரிசாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.   ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி பெரிய தலைவராக நினைத்து பேசுகிறார்கள்’’ என்று சொன்ன கோவை செல்வராஜ்,   ’’அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் இரண்டுமே காலாவதி ஆகிவிட்டன.  தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை’’என்கிறார்.

 நவம்பர் 21ஆம் தேதி வரக்கூடிய பொதுக்குழு தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை உள்ளது.  2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.  மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று அமைச்சர்கள் தங்கள்  உதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார்களே தவிர ஜெயலலிதாவின் முயற்சிக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் முயற்சி செய்யவில்லை என்றார்.