×

#BREAKING சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

 

தேனியில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அதிமுகவில் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு,  இருவரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார்.  இதனையடுத்து  பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதில்  ஆகஸ்ட் 17ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று  உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை இருநபர் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இன்று அறிவித்த தீர்ப்பில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை  ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு நீதிபதிகளும்  தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து தேனியில் இருந்து ஓபிஎஸ் சென்னை வருகை தந்தார். அப்போது வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை ஓபிஎஸ் சந்தித்தார். 200 மேற்பட்ட தொண்டர்கள் கூடி நின்று ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனை அடுத்து வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஒபிஎஸ் இல்லம் வருகை தந்தனர்.உச்சநீதிமன்றத்தில் ஒபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்ய உள்ள நிலையில் அது குறித்து நிர்வாகிகளுடன் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.