×

செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு
 

 

அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி  மீதான மனு மீது 31ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது நீதிமன்றம்.

 மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி,  கடந்த 2011 -15 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது , போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.  இதை அடுத்து செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் சகாயராஜன், தேவ சகாயம், பிரபு, அன்னராஜ் உள்ளிட்டோர்  மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல்,  நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்ற பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர்.

 இந்த வழக்குகள் சென்னை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.  தன் மீதான இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.   அமலாக்கத்துறை தரப்பு இதற்கு தெரிவித்தது.   தமிழக அரசில் அதிகாரம் மிக்கவராக உள்ளார் செந்தில் பாலாஜி.   அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது.

 புகாரதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,    மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜி  மனு மீது  வரும் 31-ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக கூறினார் நீதிபதி.