×

என் காலில் இனிமேல் யாரும் விழவேண்டாம் - சசிகலா வேண்டுகோள்

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் , அவரது தோழி சசிகலாவும் அதிகம் விமர்சிக்கப்பட்டது கட்சியின் சீனியர்கள் பலரும் அவர்கள் காலில் விழுந்து வணங்கியதைத்தான்.  அவர்கள் ஆகாயத்தில் விமானத்தில் பறக்கும் போது கூட கீழே நின்று வணங்குவார்கள்,  அவர்கள் பயணம் செய்யும் காரின் டயரை தொட்டு வணங்குவார்கள் என்றெல்லாம் கடுமையாக சமூக வலைத்தளங்களில் அதிமுகவின் சீனியர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் காலில் விழுந்து அவர்கள் வணங்கியதால்தான் அப்படி விமர்சனம் செய்து வந்தனர்.  இப்போதும் கூட அந்த விமர்சனங்கள் தொடர்கின்றன.

 இந்த நிலையில் இதற்கு முட்டுக்கட்டை போட நினைத்திருக்கிறார் சசிகலா.   அவரை சந்திக்க நேரில் வருபவர்கள் அவர் மேலுள்ள பமரியாதையில் காலில் விழுந்து வணங்குவதை வேண்டாமென்று கூறியிருக்கிறார்.  தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 இதுகுறித்து அவர் மேலும்,   ’’என் உயிரினும் மேலான என் அருமை கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.  என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்... என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.   ஆனால்,   என்னிடம் மலர்கொத்து பொன்னாடை நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

 அவர் மேலும்,   ’’அப்படி ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால். ... நீங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஏழை, எளியவர்கள் ,ஆதரவற்றோர் ,வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள்.  பள்ளிகளில் கல்லூரிகளில் கல்வி கற்கக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய மாணவ செல்வங்களுக்கு உதவி செய்யுங்க.ள் பசியால் வாடுகின்ற ஏழை ,எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் .

தொடர்ந்து சசிகலா, மிக முக்கியமான ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .   ‘’என்னை சந்திக்கும் போது காலில் விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் .  என் மீது நீங்கள் காட்டுகின்ற மரியாதையை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.   உங்கள் அனைவரின் ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.