×

ஈபிஎஸ் தலைமையேற்றதும் ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை- கேபி முனுசாமி

 

ஓ.பி.எஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா ?  எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பின் ஜனநாயகம் படி செயல்பாடுகள் இருக்கும் என கே.பி.முனுசாமி விளக்கமளித்துள்ளார்.


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்  அதிமுக தலைமைக் கழக நிர்வாகி கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து, ஓபிஎஸ் இடம் இருந்து விலகி வந்ததற்கான காரணம் குறித்து விளக்கி பேசினார். அப்போது, 
திமுக உடன் அனுசரித்து செல்கிறார் ஓபிஎஸ். சட்டப்பேரவையில் பேசும்போது கூட கலைஞர் வசனத்தை வைத்து பேசினார். இலங்கைக்கு உதவித்தொகை கூட அதிமுக பெயரில் அறிவிக்காமல் முதல்வரை திருப்திபடுத்த குடும்பத்தின் பெயரில் வழங்குவதாக கூறி சுயநலமாக செயல்பட்டார் ஓபிஎஸ். இதையெல்லாம் சாதாரண தொண்டன் எப்படி ஏற்பான்? திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் தான் அவரை விட்டு விலகினேன் என தெரிவித்தார். 

தொடர்ந்து , திமுக உதவியினால் கிருஷ்ணகிரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை மகன் பெயரில் குத்தகைக்கு எடுத்துள்ளதாக கோவை செல்வராஜ் கூறிய குற்றச்சாட்டை மறுத்த முனுசாமி, ஆவின் மற்றும் இந்தியன் ஆயில் இணைந்து
அந்த பெட்ரோல் பங்கை நடத்துவதாகவும். பொதுவாழ்வில் உள்ள என் நற்பெயரை கொடுக்கவே இப்படி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதாக கூறினார். இதே போல கொடநாடு வழக்கு விவகாரத்தில் தன் மகனையே அம்பாக எய்தி ஓபிஎஸ் பேச வைப்பதாகவும், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்ட போது நடந்த சம்பவங்கள் ஒன்றை கூட வெளியே சொல்ல மாட்டேன். கட்சிக்கு மரியாதை வருவது போன்ற செயலில் தான் நான் ஈடுபடுவதன். இத்தனை ஆண்டு ஓபிஎஸ் உடன் பயணித்தது வெட்கமாகவும் வேதனையாகவும்  உள்ளது என தெரிவித்தார். 
மேலும், ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பின் ஜனநாயக படி கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். சர்வாதிகாரம் தலைத்தூக்காது என தெரிவித்தார்.