×

தேர்தல் ஆணையத்தை அணுக திட்டம்போடும் எடப்பாடி பழனிசாமி

 

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதும் விதிகளின்படி சரியே என தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் விதிகள் மீறப்பட்டதாகவும், விதியை மீறி அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர் பதவி ஐந்து வருடத்திற்கு செல்லும் எனவும் குறிப்பிட்டு  இந்திய தேர்தல் அணையத்திற்கு ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். 

இந்நிலையில் இன்று மதியம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள  இல்லத்தில், சி.வீ சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வளர்மதி போன்ற மூத்த நிர்வாகிகளை சந்தித்து பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 
தங்களுடைய தரப்பு விளக்கத்தை மனுவாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. அந்த மனுவில்
அதிமுக சட்ட வதிகளின் படி பொதுக்குழு கூட்டவதற்கு உள்ள அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதற்கான சட்ட விதிகள் குறிப்பிட்டு விரிவான பதில் தயார் செய்யப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டம் விதிமீறலாக கூட்டப்பட்டது அல்ல என்பது குறித்தும் அதில் விளக்கமளிக்கப்படவுள்ளது. மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேரின் ஆதரவு உள்ளதை அவர்களது கையெழுத்தோடு தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பழனிசாமி தரப்பில் இருந்து மனு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.