×

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி?

 

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருபுறமும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு புறமும் குரல் எழுப்ப தொடங்கிய நிலையில் அவரவர் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு என கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல், இரட்டைத் தலைமை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய ஒப்புதல், கழக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த ஒப்புதல், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா அறிவிக்க வலியுறுத்தல் ஆகிய 
விவரங்களோடு அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.