×

கட்சிக்கு துரோகம் செய்தவர்களே ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளனர்- ஈபிஎஸ் ஆதரவாளர்

 

ஒபிஎஸ் இபிஎஸ்சால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று ஒபிஎஸ் பக்கம் சென்று விட்டு கிருஷ்ணகிரி அதிமுகவை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ அசோக்குமார் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் தலைமை வகித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக்குமார், “கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ், இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதற்காக மாவட்ட கழகத்தின் சார்பில் அவருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய 3 சட்டமன்ற
தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு நாள் கூட முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஓட்டு சேகரிக்க வரவில்லை. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விட கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் செலவு செய்தவர் கோவிந்தராஜ்.கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர் அவர். அதே போல கிருஷ்ணமூர்த்தி அவர் இருந்த கட்சியில் விசுவாசமாக இல்லை. அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பதவிக்கு வர அனைவரும் கடுமையான உழைக்க வேண்டும். மற்றவர்கள் பதவிக்கு வந்தால் அவர்கள் ஒதுங்கி கொள்வார்கள்.

இன்றைய தினம் 12 ஒன்றிய செயலாளர்கள், 2 பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் 2 ஆயிரம் கிளை கழக நிர்வாகிகள்  எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனர்.அன்று இபிஎஸ், ஒபிஎஸ்சால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட மேற்கண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை இன்று ஒபிஎஸ் பக்கம் சென்று குற்றம் சாட்டுகின்றனர்