×

அதிமுகவில் நடக்கும் பிரச்சனை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தாது- அண்ணாமலை

 

தேசிய மகளிர் கூடைப்பந்து குழு முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால் துறை அவர்களை பாராட்டி பாஜக சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அண்ணாமலை, “நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். சிபிஎஸ்இ பாட திட்டம் மாநில அரசு பாட திட்டம் இடையே இருந்த வித்தியாசமும் ஒரு காரணம். தற்போது பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டது.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நீட் தேர்வே காரணம்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பத்தான் போகிறார். தமிழ்நாடு அரசு நீட் எதிர்ப்பு மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு போராட்டங்களையும் மீறி மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டின் கருப்பு நாள். தமிழ்நாடு மக்கள் 2024 வரை பொறுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் பார்க்காத ஒரு அடியை திமுக 2024 தேர்தலில் பார்க்கும். போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். 


பாஜக கூட்டணியில் உள்ள வலிமையான கட்சி அதிமுக. அக்கட்சி யாரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த தொண்டர்கள் முடிவு செய்வார்கள். இந்த பிரச்சனைகள் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தாது, பிரதமரின் 10 ஆண்டு சாதனையை பார்த்து மக்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.