×

அண்ணாமலைக்கும் எனக்கும் சிண்டு முடிக்க வேண்டாம்  - அன்புமணி ராமதாஸ்

 

தமிழர்களின் பாரம்பரியம், வழிபாடு முறைகளை பாதுகாக்க வேண்டும் வேண்டுமென எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது  என தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். 


ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

பின்னர் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 23 உயிர்கள் நாம் இழந்துள்ளோம். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் நகை உள்ளிட்ட உடமைகளை இழந்து கடன் ஏற்பட்டு சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்திற்கே விஷம் குடித்து தற்கொலை செய்யக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.  கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3,000 கோடி கிடைத்துள்ளது. 

இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் சொல்கிறார்கள். இந்த 40,000 கோடி யாருடைய பணம்?  சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுடைய பணம்.  நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு இரண்டு வாரம் வரை காத்திருக்காமல் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு உடனடியாக அறிக்கையை சமர்ப்பித்து அவசர சட்டம் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்.  பாட்டாளி மக்கள் கட்சி ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை மக்களின் நலனுக்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் பாமகவின் அடுத்தடுத்த போராட்டங்கள் அமையும். அரசு ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்ய குழு அமைத்து இருப்பது வரவேற்கதக்கது என தெரிவித்த அவர் தமிழர்களின் பாரம்பரியம் , வழிபாடு முறைகளை அரசு பாதுகாக்க வேண்டும் வேண்டும் என அரசு எதிர்ப்பது நியாயமற்றது. காவேரி விவகாரத்தில் அதில் அணை கட்டுவதை தடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக ஆளும் மாநிலமான கர்நாடக முதல்வருடன் பேசி சுமூக உடன்பாட்டை எடுக்க வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு தனக்கும் செய்து முடிக்க வேண்டாம்” எனக்கூறினார்.