×

ஒற்றைத் தலைமையை ஏற்று ஓபிஎஸ் மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள தயார்- கடம்பூர் ராஜூ

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  முன்னாள் அமைச்சரும்  சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். 
 

அப்போது பேசிய அவர், "நீதிமன்ற தீர்ப்பை பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது நியாயத்தின் தீர்ப்பு, நீதிமன்றமாக இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி,எங்கு சென்றாலும் மெஜாரிட்டி யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் வெற்றி. அவர்கள் பக்கம் தான் நீதி இருக்கும். 

ஒற்றைத் தலைமை தான் என்று முடிவை ஏற்றுக்கொண்டு வந்தால் இணைத்துக் கொள்ள தயார். ஆனால் ஒற்றைத் தலைமை என்ற முடிவில் மாற்று கருத்து இல்லை. அதிமுக 
தலைமை எங்கே இருக்கின்றதோ அங்க தான் அதிமுக இருக்கும் தொண்டர்கள் இருப்பார்கள்.  தொண்டர்களும் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறது. நாங்கள் வலுவாக இருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் இணைத்து கொள்வோம். தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி
நிரந்தர பொதுச் செயலாளர். அரசியல் கட்சி நடைமுறையில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே உயர்நீதிமன்றத்திற்கு  திருப்பி விட்டது.

நாங்க எதை பார்த்து பயப்படவில்லை. 98 சதவீதம் பேர் எங்கள் பக்கம்  உள்ளார்கள். 
2 சதவீதம் உள்ளவர்களை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் போயிருக்கலாம். ஆனால் அங்கு நான்கு பேர் தான் இருக்கலாம் அவர்கள் கூட திரும்ப எங்களுடன் வந்து இணையலாம். தமிழகத்தில் யாரும் வளர முடியாது தமிழகத்தில் பெரிய இயக்கமாக அதிமுகவில் உள்ளது. எத்தனையோ பிளவுகளை அதிமுக பார்த்து உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. பொறுப்பில் உள்ளவர்கள், நிர்வாகிகள் அணி மாறலாம். ஆனால் அதிமுகவை பொருத்தவரை அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான். தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது" எனக் கூறினார்.