×

சசிகலாவை வரவேற்க நடப்பட்ட அதிமுக கொடிகளை பிடுங்கி எறிந்த நிர்வாகி

 

திண்டிவனம் அடுத்த மைலத்தில் நடைபெறும் திருமண விழாவிற்கு வருகை புரிந்த  சசிகலாவை வரவேற்பதற்காக அதிமுக கொடிகள் நடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் முகமது ஷெரீப் மற்றும் சேகர் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர், இதனையடுத்து அவர்களை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் இது பேசு பொருளாக மாறி இருந்தது, இந்நிலையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அம்மா பேரவை இணை செயலாளர் சேகரின் மகள் திருமண விழா இன்று மயிலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சசிகலா வந்ததால் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியிலிருந்து மயிலம் வரை அதிமுகவின் கொடிகளுடன் வி.கே, சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டன. இதற்காக அதிமுக கொடிகள் நடப்பட்டன. இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்காக அதிமுகவின் கொடிகள் பயன்படுத்தப்படுவது ஏனென்று அதிமுகவின் மயிலம் ஒன்றிய செயலாளர் T.D. சேகரன், இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,  மேலும் கூட்டேப்ரிபட்டு நான்குமுனை சந்திப்பில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகளையும் பிடிங்கி எறிந்தார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, 

இதனையடுத்து சசிகலாவின் ஆதரவாளரும் முன்னாள் அம்மா இணைப் பேரவையின் செயலாளர் சேகர் மீண்டும் அதே இடத்தில் கொடிகளை நட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்த மயிலம் காவல் ஆய்வாளர் ராதிகா, அதிமுகவினரிடம் சசிகலா ஆதரவாளர்கள்  அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது எனில் அதற்கான சட்ட நகலை எடுத்து வந்தால் அதற்கான  நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர்.