☰
×

இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்?

 

அதிமுகவில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாலும் கூட திமுகவில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட விலகி தவெகவில் இணையவில்லை என திமுக தரப்பில் மார் தட்டி வந்ததின் பின்னணியில், அடுத்த ஆறு மாதத்தில் இந்த தவெக ஆட்சி கவிழ்ந்து விடும் என திமுக எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை தான் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தவெக தரப்பில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் பல திமுக எம்எல்ஏக்கள் திரைமறைவில் பேசிக்கொண்டே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையிலே தான், பேட்டி ஒன்றில் கூட திமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என செங்கோட்டையன் சூசமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தல் முடிவுக்காக தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைதேர்தல் முடிவுகளை பொறுத்து, திமுகவில் தொடரலாமா அல்லது தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விடலாமா என என்கிற முடிவை திமுக எம்எல்ஏ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் திமுக தோல்வியை தழுவினால், இனியும் திமுகவில் பயணிப்பது சரியாக இருக்காது என தவெகவுக்கு தாவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் 8 திமுக எம்எல்ஏ என்கிற தகவல் திமுக தலைமையை கதிகலங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடந்து முடிந்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பாதகமாகவே முடியும் என தேர்தல் களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது, இரண்டு தொகுதிகளிலும் திமுக 3 ஆம்  இடம் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், இதில் தாராபுரம் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்க கூட வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.