×

60 வயதுக்காரர் முதியவர்; 82 வயதுக்காரர் இளைஞரா? மதுரை திமுகவினரை புலம்ப விட்ட துரைமுருகன்

கட்சி நிர்வாக வசதிக்காகவும், அதே சமயம் கட்சிப்பணிகள் நிறைவாக நடைபெறவும் சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்தது திமுக. சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மதுரை வடக்கு என்றும், மதுரை தெற்கு என்றும், மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மதுரை மத்தியம் என்றும், மதுரை மேற்கு என்றும் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.வடக்கு மாவட்ட
 

கட்சி நிர்வாக வசதிக்காகவும், அதே சமயம் கட்சிப்பணிகள் நிறைவாக நடைபெறவும் சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்தது திமுக. சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மதுரை வடக்கு என்றும், மதுரை தெற்கு என்றும், மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மதுரை மத்தியம் என்றும், மதுரை மேற்கு என்றும் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொன்.முத்துராமலிங்கமும், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கோ.தளபதியும் நியமிக்கப்பட்டனர்.

இதில், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் நியமனம்தான் மதுரை திமுகவினரை புலம்ப வைத்திருக்கிறது. 82 வயதான பொன்.முத்துரா மலிங்கத்தின் நியமனத்திற்கு துரைமுருகனின் சிபாரிசுதான் காரணமாம்.

அறுபதி வயதாகிவிட்டது என்ற காரணத்தை சொல்லி, மதுரை செல்லுார் 42வது வட்டச் செயலர் ராஜனின் பதவியை பறித்துவிட்டு, அந்த பொறுப்பை முகமது யாசின் என்பவருக்கு அளித்து உத்தரவிட்டிருந்தார் துரைமுருகன். அதனால்தான், அறுபது வயதுடைய ராஜன் வயதானவர் என்றால், 82 வயதுடைய பொன்.முத்துராமலிங்கம் என்ன இளைஞரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் திமுகவினர்.

தனக்கு வேண்டப்பட்டவர் என்று வரும்போது வயது பார்க்கவில்லை என்று ஆத்திரத்தில் இருக்கிறார்களாம் ராஜன் ஆதரவாளர்கள்.