×

6 – 2 = 4 : கமலை வைத்து திமுக போடும் கணக்கு

சீரமைப்போம் தமிழகத்தை என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் முன்னெடுத்துச் சென்ற பிரச்சாரத்திற்கு வெறும் 2 சதவிகித ஆதரவு தான் இருக்கிறது என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டினால் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் காட்டிய ஆர்வத்தினை குறைத்துக்கொண்டார் ஸ்டாலின் என்று உ.பி.க்கள் சொல்லிவந்தனர். ஆனால், கடந்த தேர்தலில் ம.நீ.ம. பெற்ற வாக்குகளை வைத்து கமல்ஹாசனை திமுகவுக்குள் இழக்க தீவிரம் காட்டி வருகிறாராம் ஸ்டாலின் மருமகன் சபரீசன். கமலுடன் முதலில் பேச்சு
 

சீரமைப்போம் தமிழகத்தை என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் முன்னெடுத்துச் சென்ற பிரச்சாரத்திற்கு வெறும் 2 சதவிகித ஆதரவு தான் இருக்கிறது என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டினால் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் காட்டிய ஆர்வத்தினை குறைத்துக்கொண்டார் ஸ்டாலின் என்று உ.பி.க்கள் சொல்லிவந்தனர். ஆனால், கடந்த தேர்தலில் ம.நீ.ம. பெற்ற வாக்குகளை வைத்து கமல்ஹாசனை திமுகவுக்குள் இழக்க தீவிரம் காட்டி வருகிறாராம் ஸ்டாலின் மருமகன் சபரீசன்.

கமலுடன் முதலில் பேச்சு நடத்தியது உதயநிதிஸ்டாலின். ஸ்டாலின், ஐபேக் என்று பேச்சு போனபோது உதயநிதி அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் இப்போதைக்கு அவசியமில்லை என்று வைகோ சொன்னாலும், அவசியம் என்றே சபரீசன் கருதுகிறாராம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 6 சதவிகிதம் வாக்குகள் அதாவது சராசரியாக 12 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறது மக்கள் நீதி மய்யம். கமல் திமுகவுடன் சேர்ந்தால் இது அப்படியே கிடைக்கும் என்று நினைக்க முடியாது.

திமுக -அதிமுகவுக்கு மாற்றாக வாக்களித்தவர்கள் 2 சதவிகிதம் என்று கழித்தாலும், கமலுக்காக 4 சதவிகிதம் பேர் இருப்பார்கள். அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 8 ஆயிரம் வாக்குகள் நிச்சயம் என்று நினைக்கிறாராம் சபரீசன்.

குறைவான வாக்குகள் என்று அலட்சியப்படுத்திவிட முடியாது. கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பினை இழந்தது திமுக. அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் செய்யவே கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு கொண்டு சபரீசன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள் அறிவாலயத்து உ.பிக்கள்.