×

5 நாளில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு..குஷ்பு தகவல்

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஐந்து நாட்களில் பாஜக அறிவிக்க இருப்பதாக தமிழக பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கட்சிகள் இருந்தாலும் முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று தொடக்கத்தில் இருந்தே பாஜகவினர் சொல்லி வருகின்றனர். அதிமுகவின் அமைச்சர்கள் சிலரே, தேசிய கட்சி என்பதால் பாஜகதான் அறிவிக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி
 

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஐந்து நாட்களில் பாஜக அறிவிக்க இருப்பதாக தமிழக பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கட்சிகள் இருந்தாலும் முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று தொடக்கத்தில் இருந்தே பாஜகவினர் சொல்லி வருகின்றனர். அதிமுகவின் அமைச்சர்கள் சிலரே, தேசிய கட்சி என்பதால் பாஜகதான் அறிவிக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக அறிவித்திருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதிமுகவின் அறிவிப்பு என்பது அதிமுகவின் செயல்பாடு என்று பாமக தெரிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கூடி ஆலோசனை செய்து அதன்பின்னர்தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் ஐந்து நாளில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கும் என்றூ குஷ்பு சொல்லி இருப்பதால், தே.ஜ.கூ. கூட்டம் நடந்திருக்கிறதா? அல்லது ஐந்து நாளைக்கும் நடந்து அதில் முடிவு அறிவிக்கப்படுமா? இல்லை, பாஜகவே தனித்து அந்த அறிவிப்பை வெளியிடுமா என்ற பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.