×

கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் ; அறிக்கை சமர்ப்பித்தது கனிமவளத்துறை!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதாக கனிமவளத்துறை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமானத்திற்கு அதிகமாக 90 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது சோதனையில்
 

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதாக கனிமவளத்துறை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமானத்திற்கு அதிகமாக 90 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது சோதனையில் அம்பலமானது. கே.சி வீரமணி வீட்டிலும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் அந்நிய செலவாணி டாலர், 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டில் 275 யூனிட் மணல் சிக்கியது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கனிமவளத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கே.சி வீரமணி வீட்டிற்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலை கனிமவளத்துறை அளவீடு செய்தது. அதில் 551 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. ஒரு யூனிட்டின் சந்தை மதிப்பு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கனிமவளத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டிற்கு பின்புறம் மணல் கொட்டி வைப்பதற்கான காரணம் என்ன? மணலை வாங்கியதற்கான பில் இருக்கிறதா? என கனிமவளத்துறை விசாரணை நடத்த உள்ளது. அப்படி அதற்கான சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவின் கீழ் கே.சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.