×

4?- 5? ஜெயலலிதா இறந்த தேதி எது?  கடுப்பாகி டெலிட் செய்த கஸ்தூரி

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்தில் மர்மம் உள்ளது என்று புகார்கள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் , ஜெயலலிதாவின் உறவினர்கள் , சசிகலாவின் உறவினர்கள்,  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  காவல்துறை உயரதிகாரிகள்,  போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.   இதன் பின்னர் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல்  செய்யப்பட்டது. அந்த அறிக்கை பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஜெயலலிதாவின் இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன .  ஜெயலலிதா இறந்த நேரம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் நாலாம் தேதி மதியம் மூன்று மணி முதல் மூன்று முப்பது மணிக்குள் என்று அறிக்கையில் இருக்கின்றன.  ஆனால்,  2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்திருந்தது .

ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என்று மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி இறந்தார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  

 இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டதாக தான் சொன்னதை நினைவு கூர்ந்து இருக்கிறார். அப்போது டிவிட்டரில் ஷேர் செய்த பதிவை  தற்போது ஷேர் செய்திருக்கும் கஸ்தூரி,  2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 4ஆம் தேதி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த டுவிட்டர் பதிவை அதனை டெலிட் செய்து விட்டேன். ஆனால், பேஸ்புக் பதிவு அப்படியே இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.