×

அமையாத 3வது அணி! ரஜினி மீது அதிருப்தியில் அமித்ஷா

அதிமுகவினரும் பாஜகவினரும் நடந்து கொண்ட விதத்தைப்பார்த்து கூட்டணியில் விரிசல் என்று பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று சென்னை வந்த அமித்ஷாவுக்கு ஏக வரவேற்பு அளித்தது அதிமுக.கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று பேசினர். அடுத்து பேசிய அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தினார். அப்படியென்றால் இத்தனை நாளும் நடந்தது எல்லாம் நாடகமா? பாஜக தலைமையில் 3வது அணி அமையப்போகிறது என்றெல்லம் எழுந்த பேச்சு எல்லாம் சும்மாதானா? என்று
 

அதிமுகவினரும் பாஜகவினரும் நடந்து கொண்ட விதத்தைப்பார்த்து கூட்டணியில் விரிசல் என்று பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று சென்னை வந்த அமித்ஷாவுக்கு ஏக வரவேற்பு அளித்தது அதிமுக.கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று பேசினர். அடுத்து பேசிய அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தினார்.

அப்படியென்றால் இத்தனை நாளும் நடந்தது எல்லாம் நாடகமா? பாஜக தலைமையில் 3வது அணி அமையப்போகிறது என்றெல்லம் எழுந்த பேச்சு எல்லாம் சும்மாதானா? என்று நினைத்தால், அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது என்கிறார்கள் பாஜகவினர்.

அதிமுக, பாஜக இடையே சமீப காலமாக சுமூகமான போக்கு இல்லாததற்கு காரணம், இக்கூட்டணி உடையும் என்கிற நிலை இருந்ததுதான் காரணம்.

மூன்றாவது அணி அமைத்து முதல்வர் வேட்பாளராக பாஜக வேட்பாளரையே அறிவிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அமித்ஷா. ரஜினி கட்சி தொடங்கி பாஜகவுக்கு ஆதரவு தந்துவிட்டால், அதன்பின்னர் பாமக, தேமுதிக கட்சிகளையும் இணைத்து வலுவான 3வது அணியை அமைக்கலாம் என்று திட்டமிருந்தார். அதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அதிமுகவுடன் மீண்டும் இணைய வேண்டியது வந்தாலும் வரலாம் என்றுதான் அக்கட்சியை ஒரேயடியாக ஒதுக்கிவைக்கவில்லை. அதிமுக மீதான பாஜககவின் கனிவு இருந்துகொண்டே தான் இருந்தது.

3 அணி முயற்சியை தெரிந்துகொண்டதால்தான் அதிமுகவினரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

சென்னை வந்திறங்கும் வரைக்கும் கூட ரஜினி தரப்பில் இருந்து ஏதாவது தகவல் வந்து சேரும் என்றே எதிர்பார்த்திருந்தார் அமித்ஷா. ரஜினி தரப்பில் இருந்து எந்த சிக்னலும் வராததால்தான் மூன்றாவது அணி கனவை மூடி வைத்துவிட்டு, மீண்டும் அதிமுகவுடன் இணக்கமாக போயிருக்கிறார் அமித்ஷா என்கிறார்கள்.

மூன்றாவது அணி அமையாமல் போனால்தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி என்ற முடிவுக்கு வந்தார் அமித்ஷா என்று சொல்லும் பாஜகவினர், பெரிதும் எதிர்பார்த்த மூன்றாவது அணி அமையாததால் ரஜினி மீது அதிருப்தியில் இருக்கிறாராம் அமித்ஷா.