×

3 நாளில் கொரோனா நோய் இருக்காது என்று கூறும் எடப்பாடி… மருத்துவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா பரவாது, நாம் எல்லோரும் உழைக்கும் மக்கள் நமக்கு எல்லாம் கொரோனா வராது, கொரோனா 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் வரும் என்று பல்வேறு வரலாற்றின் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகங்களை வெளியிட்டவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாது, நாம் எல்லோரும் உழைக்கும் மக்கள்
 

தமிழகத்தில் கொரோனா பரவாது, நாம் எல்லோரும் உழைக்கும் மக்கள் நமக்கு எல்லாம் கொரோனா வராது, கொரோனா 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் வரும் என்று பல்வேறு வரலாற்றின் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகங்களை வெளியிட்டவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவாது, நாம் எல்லோரும் உழைக்கும் மக்கள் நமக்கு எல்லாம் கொரோனா வராது, கொரோனா 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் வரும் என்று பல்வேறு வரலாற்றின் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகங்களை வெளியிட்டவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புதிய கொரோனா நோயாளிகளே இருக்க மாட்டார்கள் என்று புதிய முத்தை உதிர்த்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு போதுமான பரிசோதனைகள் செய்யப்படாமலேயே கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று பப்ளிசிட்டி செய்யும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இன்று 25 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அடுத்த 3 – 4 நாட்களில் தமிழகத்தில் புதிய கொரோனா நோயாளிகள் இருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீங்கிவிட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், அதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. ரேப்பிட் டெஸ்டிங் கிட் இன்றுதான் இந்தியாவுக்கு வந்துள்ளது. தமிழகம் ஆர்டர் செய்த ரேப்பிட் டெஸ்டிக் கிட்டையும் மத்திய அரசே பறித்துக்கொண்டது. மத்திய அரசு எப்போது அந்த கிட்டை தமிழகத்துக்கு வழங்கும், எவ்வளவு வழங்கும் என்று தெரியவில்லை. ரேப்பிட் டெஸ்டிங் கிட் பயன்படுத்தி ஏப்ரல் 12ம் தேதி சோதனை தொடங்கிவிடும் என்று கூறிய நிலையில், 16ம் தேதி வரை பரிசோதனையே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது முதலமைச்சர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி பேசுகிறார் என்று மருத்துவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.