×

’’எமது தலைவரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை; அவரைப் பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது’’

போன் ஒட்டுகேட்பு விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். அதற்கு, அதிமுக ஆட்சி இருந்தவரைக்கும் இப்படி ஒரு பேச்சு வரவில்லை. திமுக ஆட்சி எப்போது வந்தாலும் இந்த சர்ச்சை எழுகிறது என்று பலரும் சொல்லி வருகின்றனர். வேவு பார்ப்பதற்காக இஸ்ரேல் நிறுவனத்திடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளன என்றும், பார்பிட்டன், தி வயர் உள்ளிட்ட 17 ஊடகங்கள் நடத்திய
 

போன் ஒட்டுகேட்பு விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். அதற்கு, அதிமுக ஆட்சி இருந்தவரைக்கும் இப்படி ஒரு பேச்சு வரவில்லை. திமுக ஆட்சி எப்போது வந்தாலும் இந்த சர்ச்சை எழுகிறது என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

வேவு பார்ப்பதற்காக இஸ்ரேல் நிறுவனத்திடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளன என்றும், பார்பிட்டன், தி வயர் உள்ளிட்ட 17 ஊடகங்கள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது என்றும் தகவல்.

50 ஆயிரம் செல்போன் எண்களில் 300 செல்போன் எண்கள் இந்தியர்களின் எண்கள் என்பதும், இந்த 300 செல்போன் எண்களில் 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் என்பதும், இரண்டு அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள் , ஒரு நீதிபதி மற்றும் சமூக ஆர்வலர்களின் எண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பேரின் எண்களும் வேவு பார்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

செல்போன்கள் வேவுபார்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு அரசு நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் எழுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த விளக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’ராகுல்காந்தி, அவரது உதவியாளர்கள், நண்பர்கள் எல்லோருடைய அலைபேசியையும் மோடி அரசு தொடர்ந்து ஒட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. எமது தலைவரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அவரைப் பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது என்பது மட்டும் நிச்சயம்’’என்கிறார். மேலும், நாட்டின் பாதுகாப்பு ஒட்டு மொத்தமாக பறிபோயுள்ளது. இது தேசத்துரோகமானது. இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

காங்கிரஸின் இந்த குற்றசாட்டுகளுக்கு, ‘’நாட்டின் பாதுகாப்பை பறிக்க காங்கிரஸ் முயல்கிறது. இது தேசத்துரோகமானது. வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுக்கு இந்தியர்கள் குறித்த தவறான தகவல்களை அனுமதியில்லாமல் அளிப்பது காங்கிரஸ் தான்’’ என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.