×

சிபிசிஐடி விசாரணையில் இருந்து தப்பிக்கத்தான் திமுகவில் இணைந்தாரா தோப்பு ?

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார். ’’ நிதியைத்தேடி நாங்கள் வரவில்லை உதயநிதியை தேடி வந்திருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்’’ என்று இணைப்பு விழாவில் பேசியிருக்கிறார் தோப்பு வெங்கடாசலம். மணல் கொள்ளை வழக்கில் கைது ஆகாமல் தப்பிப்பதற்காகத் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவுகிறது. அதற்கு ஆதாரமாக மணல் கொள்ளை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள ’மக்கள் சேவை’ இயக்க
 

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார். ’’ நிதியைத்தேடி நாங்கள் வரவில்லை உதயநிதியை தேடி வந்திருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்’’ என்று இணைப்பு விழாவில் பேசியிருக்கிறார் தோப்பு வெங்கடாசலம்.

மணல் கொள்ளை வழக்கில் கைது ஆகாமல் தப்பிப்பதற்காகத் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவுகிறது. அதற்கு ஆதாரமாக மணல் கொள்ளை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள ’மக்கள் சேவை’ இயக்க நிர்வாகி நந்தகுமார் தரப்பில் இருந்து செய்தியாளர்களுக்கு ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, 2017ல் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளையை தடுப்பதற்காக மக்கள் சேவை இயக்க நிர்வாகி நந்தகுமார் ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தோப்பு வெங்கடாசலம் பெயரும் இருந்ததால் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட தோப்பு வெங்கடாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரினார் நந்தகுமார்.

இந்த வழக்கினை 2. 7. 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்தது. அதனால் இதை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எடுத்து 3. 3 .2020 ல் தோப்பு வெங்கடாசலத்திற்கு நெருக்கமான சேனாதிபதி, சுப்பிரமணியம் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தோப்பு வெங்கடாசலம் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் மணல் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால் தோப்பு வெங்கடாசலம் கைது செய்யப்பட வேண்டிய நிலை வரும். இதற்காகத்தான் நந்தகுமார் போலீஸ் பாதுகாப்போடு இருக்கிறார் அவரது பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறது என்று வழக்கறிஞர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த மணல் கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தாரா என்று பலரும் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.