×

தினகரன் பின் வாங்கினாலும் சசிகலா விடுவதாக இல்லை..ஓபிஎஸ்-இபிஎஸ் அதிர்ச்சி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க 2017ம் ஆண்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவியை அறிமுகம் செய்தனர். அந்த அதிமுக பொதுக்கூழு கூட்டம் செல்லாது என்றும், அந்த தீர்மானம் சட்ட விரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க 2017ம் ஆண்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவியை அறிமுகம் செய்தனர். அந்த அதிமுக பொதுக்கூழு கூட்டம் செல்லாது என்றும், அந்த தீர்மானம் சட்ட விரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு வரும் 20ம் தேதி அன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான டிடிவி தினகரன் அண்மையில் இந்த வழக்கினை வாபஸ் பெற்றிருந்தார். துணைப்பொதுச்செயலாள என்ற பதவியில் இருந்து தன்னை நீக்கியதால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அதிமுகவை விட்டு தனியாக அமமுக கட்சியை தொடங்கி டிடிவி தினகரன் நடத்தி வந்ததால் அவர் இந்த மனுவை வாபஸ் பெற்றாலும் கூட சசிகலா தொடர்ந்து வழக்கை நடத்துவார் என்று அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

வழக்கினை தொடர்ந்து நடத்தப்போவதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. வரும் 20ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்பு அதிர்ந்து போயிருப்பதாக தகவல்.