×

நாங்கள் மத்திய அரசு என்றுதான் சொல்லுவோம்- அடித்துச் சொன்ன அன்புமணி

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சில ஊடகங்களும் இதை அடுத்து ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றன. திமுகவை அடுத்து சில கட்சிகளும் கூட ஒன்றிய அரசு என்று மத்திய அரசை குறிப்பிட்டு வருகின்றன. இதற்கு பாஜகவும் பிற கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர்
 

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சில ஊடகங்களும் இதை அடுத்து ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றன.

திமுகவை அடுத்து சில கட்சிகளும் கூட ஒன்றிய அரசு என்று மத்திய அரசை குறிப்பிட்டு வருகின்றன. இதற்கு பாஜகவும் பிற கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையிலும் கூட ஒன்றிய அரசு என்று இடம் பெற்றிருந்ததற்கு பாஜகவினர் அதிருப்தி தெரிவித்தனர், அதே நேரம் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்து பேசியபோது, ஒன்றிய அரசு என்றுதான் நாங்கள் சொல்லுவோம். அதிலிருந்து மாறப்போவதில்லை . ஒன்றிய அரசு என்று சொல்வதுதான் சரியானது. அதனால் நாங்கள் ஒன்றிய அரசு என்று தான் கடைசி வரைக்கும் சொல்லுவோம் என்று உறுதியாகச் சொன்னார்.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒன்றிய விவகாரம் குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘’ எங்களை பொறுத்த வரையிலும் நாங்கள் மத்திய அரசு என்று தான் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை’’ என்று அடித்துச் சொன்னார்.

அவர் மேலும், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக திமுக சொன்னது. ஆனால் தற்போது ஏன் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிற அவர்களிடம் ’தேதி சொல்லவில்லை’ என்கிறார்கள். அது ஆக்கபூர்வமான பதில் இல்லை என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.