×

எடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகி விட்டார். இந்நிலையில், சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றி கட்சியை வழி நடத்த போவதாக தொடர்ந்து அவர் அதிமுகவினர் பலரிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி செம டென்ஷனில் இருந்து வந்தார். எங்கே ஓ. பன்னீர்செல்வம்
 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகி விட்டார்.

இந்நிலையில், சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றி கட்சியை வழி நடத்த போவதாக தொடர்ந்து அவர் அதிமுகவினர் பலரிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி செம டென்ஷனில் இருந்து வந்தார். எங்கே ஓ. பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் சாய்ந்து தனக்கு அதிக நெருக்கடியை கொடுப்பார் என்று அவர் டென்ஷனில் இருந்ததாக தகவல்.

சசிகலா, மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் அதிமுகவின் அதிருப்தியாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், சிட்டிங் எம்எல்ஏக்களை தன் பக்கம் நிலையாக நிற்க வைக்க, சசிகலா பக்கம் சாய்ந்து விடாமல் செய்ய எடப்பாடி ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதையடுத்து சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளதாகவும் தகவல் பரவுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் நிறைய செலவு செய்திருப்பார்கள். அதனால் அதை சரிக்கட்டும் விதமாக அவர்களின் சுமையை குறைக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி கொடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்று தகவல். எடப்பாடியின் இந்த திடீர் பரிசினால் திக்குமுக்காடி போய் இருக்கிறார்களாம் சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்கள்.

அதே நேரத்தில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்கள், நாங்கள் செலவு செய்ய வில்லையா என்ன? எங்களுக்கு மட்டும் ஏன் எடப்பாடி பணம் தரவில்லை என்று கேட்கிறார்களாம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரோ, இப்போதைக்கு சசிகலா அதிமுகவிற்குள் நுழையாமல் இருக்கவும், தனக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தக்க வைப்பதற்கும் சிட்டிங் எம்எல்ஏக்களின் ஆதரவு தொடர்ந்து தேவை. அதனால்தான் அவர்களை முதலில் கவனித்திருக்கிறார் எடப்பாடி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்.