×

அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்..கமல் அவசர கோரிக்கை

மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு
 

மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.


இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3,128 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று உயிரிழந்து வருகின்றனர். இது குறித்து விபரங்களை உடனுக்குடன் பதிவு செய்யதால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவே கமல்ஹாசன், அரசு இதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.