×

வட மாவட்டங்களை வளைக்கும் ஓபிஎஸ்! பண்ணைவீட்டு சந்திப்புகள்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் ஈபிஎஸ்

தனித்தனியாக அறிக்கைகள் விட்டு வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இப்போது தனித்தனியாக கூட்டம் நடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நாள் முதல் பன்னீர்செல்வம் , தான் எப்படியும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் தான் என்பதை உணர்த்த முடிவு செய்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். இதனால் அவர் தேனி மாவட்டம் கைலாசபட்டி பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடியே அவர் தனது ஆதரவாளர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி
 

தனித்தனியாக அறிக்கைகள் விட்டு வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இப்போது தனித்தனியாக கூட்டம் நடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நாள் முதல் பன்னீர்செல்வம் , தான் எப்படியும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் தான் என்பதை உணர்த்த முடிவு செய்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.

இதனால் அவர் தேனி மாவட்டம் கைலாசபட்டி பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடியே அவர் தனது ஆதரவாளர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி கைலாசபட்டிக்கு முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் வட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் சென்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றோம் என்று அனைவரும் வெளியே சொல்லி வருகிறார்கள் . ஆனால் உண்மை நிலவரம் என்னவோ எடப்பாடிக்கு எதிரான யுத்தத்திற்கான முன் களப்பணி என்கிற பேச்சுதான் தேனிமாவட்ட அதிமுவினரிடையே இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சி.வி. சண்முகத்தின் தோல்வி திட்டமிட்டது என்றும், சண்முகத்தின் வளர்ச்சியை பிடிக்காத பாமக திட்டமிட்டே அவரைதோற்கடித்துவிட்டதாக ஓபிஎஸ்க்கு தகவல் கிடைத்திருக்கிறது. சி.வி. சண்முகமும் இதை அறிந்து தனது ஆதரவாளர்களிடம் புலம்பியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், ஓபிஎஸ்க்கு ஆதரவாக வடமாவட்டத்தை திரட்ட முடிவு செய்திருக்கிறார் சிவி சண்முகம். அதன்படி சிதம்பரம் எம்.எல்.ஏ. கே. ஏ பாண்டியன், புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், வானூர் எம்.எல்.ஏ. சக்கரபாணி, திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜுனன், கள்ளக்குறிச்சி குமரகுரு உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு ஓபிஎஸ் -ஐ சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் சிவி சண்முகம்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இதுவரைக்கும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசாமல் இருந்த சண்முகம் வட மாவட்ட நிர்வாகிகளுடன் போய் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி இருப்பது எடப்பாடியையும் அவரது ஆதரவாளர்களையும் அதிர வைத்திருக்கிறது.