×

மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசர கடிதம்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், கொரோனா இரண்டாவது அலையில் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கோவையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தொழில்துறையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தடுப்பூசி போடுவதற்கான உடனடி தேவை ஏற்பட்டிருக்கிறது. கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசுக்கு உதவுவதற்கும், நெருக்கடியை திறன்பட கையாள்வதற்கும் சுகாதார
 

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.

அக்கடிதத்தில், கொரோனா இரண்டாவது அலையில் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கோவையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தொழில்துறையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தடுப்பூசி போடுவதற்கான உடனடி தேவை ஏற்பட்டிருக்கிறது.

கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசுக்கு உதவுவதற்கும், நெருக்கடியை திறன்பட கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தமிழகத்திற்கு குறிப்பாக கோவைக்குஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.