×

’’மோடி செய்தது விடியலா? ஸ்டாலின் செய்தது விடியலா?’’

கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையாக இருப்பதால் 15 நாள் முழு ஊரடங்கினை அறிவித்திருக்கிறது திமுக அரசு. இதனால் வருமானம் இழக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 4000 ரூபாய் இரண்டு தவணையாக கொடுப்பதாகவும் அறிவித்திருக்கிறது திமுக அரசு. இதில் முதல் தவணையாக 2000 ரூபாய் நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடை முன்பாக நூற்றுக்கணக்கானோர் திரண்டு நிற்கின்றனர். பணம் வாங்கும் அவசரத்தில் தனிமனித இடைவெளியில் ஆகாயத்தில் பறந்து விட்டது.
 

கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையாக இருப்பதால் 15 நாள் முழு ஊரடங்கினை அறிவித்திருக்கிறது திமுக அரசு. இதனால் வருமானம் இழக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 4000 ரூபாய் இரண்டு தவணையாக கொடுப்பதாகவும் அறிவித்திருக்கிறது திமுக அரசு. இதில் முதல் தவணையாக 2000 ரூபாய் நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ரேஷன் கடை முன்பாக நூற்றுக்கணக்கானோர் திரண்டு நிற்கின்றனர். பணம் வாங்கும் அவசரத்தில் தனிமனித இடைவெளியில் ஆகாயத்தில் பறந்து விட்டது.

திமுக பரவலைத் தடுக்க முயற்சிக்கிறதா? அல்லது பரவலுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. பழனிச்சாமி அரசை கடுமையாக விமர்சித்த இன்றைய முதல்வர் அன்று அதிமுக அரசு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வீடு வீடாக நேரில் கொடுத்தது போல் செய்திருக்கலாம். விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியை தலா 2000 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தி வரும் மோடி அரசு போல் செய்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர்.

அவர் மேலும், எது விடியல்? ஒரே பட்டனை தட்டி 9.5 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ2000 அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தியது விடியலா? இல்லை, கொரோனா நிதி எனும் பெயரில் நோய் பரவ உதவும் வகையில் சமூக இடைவெளியில்லாமல் ரேஷன் கடையில் வழங்கியது விடியலா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.