×

’’இதற்கு பெயர்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது..’’

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் மூலம் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் மருத்துவமனைகள், ஏழை-எளியவர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும். மேலும், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச
 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் மூலம் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் மருத்துவமனைகள், ஏழை-எளியவர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

மேலும், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவித்துள்ள அமைச்சரின் அறிவிப்பு குறித்து எழுத்தாளரும், திமுக பேச்சாளருமான வே.மதிமாறன், அறநிலையத்துறை அமைச்சர் அன்னதானத்தை எங்கு நிகழ்த்துகிறார் பாருங்கள்? இதற்கு பெயர்தான் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது’ என்று தெரிவித்துள்ளார்