×

அத்தனை பேரும் எதிராக திரும்ப வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்

அதிமுகவில் எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து அந்த அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். ஆனால் இன்றைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அது குறித்து இருவரும் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியோ, இருவரும் இணைந்த அறிக்கை வெளியிடவோ இல்லை. எதிர்கட்சித் தலைவர் யார் என்கிற கேள்வி அதிமுகவில் எழுந்தபோது ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இருவருமே அந்த பதவிக்கு போட்டா போட்டி போட்டனர். இதனால்
 

அதிமுகவில் எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து அந்த அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். ஆனால் இன்றைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அது குறித்து இருவரும் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியோ, இருவரும் இணைந்த அறிக்கை வெளியிடவோ இல்லை.

எதிர்கட்சித் தலைவர் யார் என்கிற கேள்வி அதிமுகவில் எழுந்தபோது ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இருவருமே அந்த பதவிக்கு போட்டா போட்டி போட்டனர். இதனால் கடந்த 7ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்யாமல் போனது. அதை அடுத்து மீண்டும் இன்றைக்கு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருமே விடாப்பிடியாக இருந்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருந்திருக்கிறது . அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி இருக்கின்றனர். இதனால் ஆத்திரமான பன்னீர்செல்வம் முன்னாள் சபாநாயகர் தனபால் எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழிந்திருக்கிறார்.

இதனால் கொஞ்சம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கே மெஜாரிட்டி இருந்திருக்கிறது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமான ஓ. பன்னீர்செல்வம் வெளிநடப்புச் செய்ததாக தகவல்.

எடப்பாடி பழனிச்சாமி தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை அதிகாரபூர்வமாக ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பேட்டி மூலமாகவோ அறிக்கை மூலமாகவோ அறிவிக்கவில்லை என்றாலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் சட்டமன்ற செயலகத்திற்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கான போட்டோவும் அதிமுக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த போட்டோவில் ஓபிஎஸ் இல்லாமல் இருப்பது அவர் வெளிநடப்பு செய்ததை உறுதிப்படுத்துகிறது.