×

இறுதி மூச்சு வரை விசுவாசத்தையும், கொள்கையையும்…டி.டி.வி தினகரன் உருக்கம்

நம் இதயத்திலும் இயக்கத்திலும் இரண்டற கலந்துவிட்ட என் அன்பு சகோதரன் மேலூர் ஆர். சாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று என்று சொல்லும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இறுதி மூச்சு வரை விசுவாசத்தையும் கொள்கையையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சாமியின் நினைவுகளைப் போற்றுவோம்! சாமி மறைந்திடவில்லை! – உறுதியான உள்ளம், மாறாத கொள்கைப் பிடிப்பு, கடும் உழைப்பு கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களின் வடிவில் நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உருக்கமுடன்
 

நம் இதயத்திலும் இயக்கத்திலும் இரண்டற கலந்துவிட்ட என் அன்பு சகோதரன் மேலூர் ஆர். சாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று என்று சொல்லும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இறுதி மூச்சு வரை விசுவாசத்தையும் கொள்கையையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சாமியின் நினைவுகளைப் போற்றுவோம்! சாமி மறைந்திடவில்லை! – உறுதியான உள்ளம், மாறாத கொள்கைப் பிடிப்பு, கடும் உழைப்பு கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களின் வடிவில் நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார் .

கடந்த 10.5.2018ல் டி.டி.வி. தினகரனின் முக்கிய ஆதரவாளரும், மதுரை மேலூர் முன்னாள் எம்எல்ஏவுமான சாமி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
மேலூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2001, 2006, 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் சாமி. கடந்த முறையும் மேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அவரது உடல்நிலையை கருதி அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஜெ., மறைவுக்கு பின்னர் எடப்பாடி அணி, சசிகலா அணி என பிரிந்ததும், சசிகலா அணியில் தினகரனுக்கு பக்க பலமாக இருந்து வந்தார் சாமி. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். ஆளும் கட்சியின் நெருக்கடிகளை எதிர்த்து பொதுக்கூட்டத்தை நடத்தவும், கூட்டத்தில் ஆட்களை திரட்டவும் சாமிதான் சரியான நபர் என்று மேலூரை தேர்வு செய்து அங்கு கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன்.

அந்த அளவுக்கு தனக்கு முக்கியமான நபர் என்று தினகரன் கருதிய சாமி மறைந்த தினம் இன்று. அதை முன்னிட்டு, தனது இரங்கலை வெளியிட்டிருக்கிறார் அவர்.