×

’’பிரதம சாமியாராக இருக்க வேண்டியவரை பிரதம அமைச்சராக்கிய பாவத்திற்கு…’’

டில்லியில் நிலைமை படுமோசம். மருத்துவமனைகளுக்கு சென்று பிராணவாயு, மருந்து இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய மோடி குருத்வாரா சென்று வழிபாடு செய்கிறார்! பிரதம சாமியாராக இருக்க வேண்டியவரை பிரதம அமைச்சராக்கிய பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறது நாடு என்கிறார் அரசியல் விமர்சகர் அருணன். டெல்லியில் சீக்கியர்களின் புனித தலம் குருத்வாரா. சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை இங்கே வணங்கி வருகிறார்கள். இந்த சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு, கடந்த
 

டில்லியில் நிலைமை படுமோசம். மருத்துவமனைகளுக்கு சென்று பிராணவாயு, மருந்து இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய மோடி குருத்வாரா சென்று வழிபாடு செய்கிறார்! பிரதம சாமியாராக இருக்க வேண்டியவரை பிரதம அமைச்சராக்கிய பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறது நாடு என்கிறார் அரசியல் விமர்சகர் அருணன்.

டெல்லியில் சீக்கியர்களின் புனித தலம் குருத்வாரா. சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை இங்கே வணங்கி வருகிறார்கள். இந்த சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழிபட சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது அவர் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், முன்னேற்பாடுகளும் எதுவும் செய்யாமல், சென்று வழிபட்டு வந்தார்.

அதே மாதிரி, இன்று குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப்பில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர்ஜியின் 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அங்கு சென்று பிரார்த்தனை செய்தார் பிரதமர் மோடி.

குருத்வாரா செல்லும்போது எந்த பாதுகாப்பு அதிகாரியையும் உடன் அழைத்து செல்லவில்லை. பிரதமர் செல்கிறார் என்பதற்காக வழியில் எந்த போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்களை காத்திருக்க செய்யவில்லை. எளிமையாக சென்று வணங்கிவிட்டு வந்தார் பிரதமர்.

இதுகுறித்துதான் அருணன் மேற்கண்டவாறு விமர்சித்திருக்கிறார்.