×

கமீலா விலகலுக்கும் சரத்குமாருக்கும் என்ன சம்பந்தம்?

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதிலிருந்து கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார் கமீலா நாசர். அவர் இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். தான் ராஜினாமா செய்யப்போவதாக அண்மையில் கமீலா நாசர் கமலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று அவர் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருந்து கமீலா நாசர் விலகியதற்கு
 

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதிலிருந்து கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார் கமீலா நாசர். அவர் இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

தான் ராஜினாமா செய்யப்போவதாக அண்மையில் கமீலா நாசர் கமலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று அவர் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் இருந்து கமீலா நாசர் விலகியதற்கு காரணம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கமீலா விலகலுக்கும் சரத்குமாருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரித்தபோது, ’’நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைவராக இருந்தபோது அவரை எதிர்த்து நாசர் போட்டியிட்டு வென்றார். சரத்குமாரை எதிர்த்து போட்டியிடுவதற்கும், நாசர் தேர்தலில் நின்றதற்கும் கமல்ஹாசனின் தூண்டுதல் தான் காரணம் என்று அப்போது எல்லோரும் பேசிக் கொண்டார்கள். சரத்குமாரும் அதை நம்பினார்.

அதனால் தான் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசனை கடுமையாக சாடினார் சரத்குமார். அப்படிப்பட்ட சரத்குமார் 2021 சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மையம் கட்சியோடு கூட்டணி அமைத்த போது பெரும் ஆச்சரியம் இருந்தது . அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் பலர் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் கமீலா நாசர் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்ளவில்லை.

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது சரத்குமாரும், ராதிகாவும் அவரது ஆதரவாளர்களும் தன் கணவரை கடுமையாக விமர்சித்ததை கமீலா மனதில் வைத்து உள்ளார். அதனால் சரத்குமாரும், ராதிகாவும் மக்கள் நீதி மையம் கட்சிக்குள் வந்ததையும் அவர்கள் மக்கள் நீதி மையம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து வருவதையும் ஆரம்பம் முதலே கமீலா விரும்பாமல் இருந்திருக்கிறார். இதை கமல்ஹாசன் இடமும் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு கமல், இது தேர்தல் நேரம். வேறு ஒரு தளத்தில் நடந்த மோதலை விவகாரத்தை இங்கே கொண்டுவந்து முடிச்சுப் போடுவது ஞாயமில்லை. உங்களைவிட என்னை கடுமையாக விமர்சித்தவர் சரத்குமார். அப்படிப்பட்டவரே வந்து இணைந்து இருக்கிறார். நம் கட்சியை விடவும் சமத்துவ மக்கள் கட்சி மூத்த கட்சி. அந்தக் கட்சியே நம் கட்சியில் வந்து இணைகின்ற போது அதை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். பிரச்சினை ஆக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். ஆனாலும் கமீலா அந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் தேர்தலில் அவர் சரியாக வேலை செய்யவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு தேர்தலுக்கு பின்னர் கட்சியில் இருந்து விலகப்போவதாக கடிதம் எழுதியிருந்தார் இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்’’ என்கிறார்கள் மக்கள் நீதி மையத்தின் சீனியர்கள் சிலர்.