×

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக பொறுபேற்க இறைவனை பிரார்த்திக்கிறேன் – எச்.ராஜா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி நலமுடன்
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ள நிலையில் வீட்டில் முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.

மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ’’மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து பூரண நலமுடன் இல்லம் திரும்பி மீண்டும் தமிழக முதல்வராக பொறுபேற்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.