×

திமுகவுக்காக ஐபேக் ஆடிய உள்ளே- வெளியே ஆட்டம்

திமுகவுக்கு தேர்தல் பணிகள் செய்து வந்த ஐபேக் குழுவினர் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு பின்னர் தனது பணிகளை முடித்துவிட்டு அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தங்களது அலுவலகத்தையும் காலி செய்து கொண்டு சென்றுவிட்டனர். திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுப்பதற்காகத்தான் அக்குழுவினர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வாக்குப்பதிவு அன்றைக்கூட, இன்னும் சொல்லப்போனால் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்து இருக்கிறது ஐபேக். திமுகவின் பூத் ஏஜென்டுகளுடன் ஐபேக் சார்பாக பயிற்சி
 

திமுகவுக்கு தேர்தல் பணிகள் செய்து வந்த ஐபேக் குழுவினர் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு பின்னர் தனது பணிகளை முடித்துவிட்டு அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தங்களது அலுவலகத்தையும் காலி செய்து கொண்டு சென்றுவிட்டனர்.

திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுப்பதற்காகத்தான் அக்குழுவினர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வாக்குப்பதிவு அன்றைக்கூட, இன்னும் சொல்லப்போனால் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்து இருக்கிறது ஐபேக்.

திமுகவின் பூத் ஏஜென்டுகளுடன் ஐபேக் சார்பாக பயிற்சி பெற்றவரும் உள்ளே சென்று அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் அந்த வாக்குச் சாவடியை சேர்ந்த திமுகவுக்கு சாதகமான வாக்குகள் வந்து சேர்ந்து விட்டதா என்பதை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் வெளியே வந்து ஐபேக் சார்பில் வெளியே பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொருவரிடம் விவரங்களைச் சொல்ல அவர் திமுகவுக்கு சாதகமான வாக்குகளை பூத்துக்குள் கொண்டுசெல்லும் பணிகளை, வெளியே இருக்கும் திமுகவினர் இடம் சொல்ல, இப்படியாக திமுகவிற்கு வாக்குகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அப்படி வந்து வாக்களித்தவர்களிடம் தனியாக பேசி திமுகவுக்கு தான் ஓட்டு போட்டீர்களா? என்பதை நைசாக பேசி உறுதி செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வாக்குப்பதிவு நடந்த இரண்டு தினங்களுக்கு பின்பு சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்குச் சென்று திமுகவுக்கு தானே ஓட்டு போட்டீர்கள் என்றும் கன்பார்ம் செய்திருக்கிறார்கள் என்று தகவல்