×

அதிமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு கொரோனா

முன்னாள் தமிழக வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன், தற்போது பல்லடம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.5 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,545
 

முன்னாள் தமிழக வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன், தற்போது பல்லடம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.5 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து, தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்த 2வது நாடு என்ற நிலையை இந்தியா எட்டி இருக்கிறது.

நேற்று ஒரே நாளில் 839 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதிக்கு பிறகு அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.