×

“எடப்பாடி கே. பழனிச்சாமி எனும் நான்…” -ஸ்டாலின் கனவுகளை சுக்குநூறாக்கிய தகவல்

கடந்த 6ம் தேதி அன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்ததால், ’இது ஆட்சிக்கு எதிரான அலை’ என்று பேச ஆரம்பித்தனர். அப்புறமாக போகப்போக வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டதால், அதற்கு ஆட்சி மாற்றம் என்று பேச ஆரம்பித்தார்கள். ’குறைந்த வாக்கு சதவிகிதம் என்றால் அது திமுக வெற்றிக்கு சாதகம்’ என்று பேச ஆரம்பித்தார்கள். திமுக தலைவர் ஸ்டாலினும் ஆட்சி மாற்றம் – புதிய ஆட்சி என்ற கனவிலேயே இருப்பதாகவும், மந்திரி சபை பட்டியல் தயார் செய்வதில்
 

கடந்த 6ம் தேதி அன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்ததால், ’இது ஆட்சிக்கு எதிரான அலை’ என்று பேச ஆரம்பித்தனர். அப்புறமாக போகப்போக வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டதால், அதற்கு ஆட்சி மாற்றம் என்று பேச ஆரம்பித்தார்கள். ’குறைந்த வாக்கு சதவிகிதம் என்றால் அது திமுக வெற்றிக்கு சாதகம்’ என்று பேச ஆரம்பித்தார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினும் ஆட்சி மாற்றம் – புதிய ஆட்சி என்ற கனவிலேயே இருப்பதாகவும், மந்திரி சபை பட்டியல் தயார் செய்வதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை என்று பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், ஸ்டாலினை கனவுகளை சுக்குநூறாக்கும்படி சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது. மீண்டும் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர முதல்வராகிறார் என்று அந்த தகவல் சொல்கிறது.

அதாவது 113 தொகுதிகளில் வெற்றி பெறும் அதிமுக, முன்னிலை கிடைக்கும் எட்டு தொகுதிகளில் 4ல் வெற்றி பெற்றாலே ஆட்சியை தக்க வைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால், “எடப்பாடி கே. பழனிச்சாமி எனும் நான்…” எனும் குரல் மீண்டும் ஒலிக்கப்போகிறது என்று தகவல் பரவி வருகிறது.