×

ஓபிஎஸ்க்கும் அவரது மனைவிக்கும் முதல்வர் ஈபிஎஸ் ஆறுதல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியாரும், உத்தமபாளையம் ஞானம்மான் கோவில் தெரு அழகுபாண்டித்தேவர் மனைவியுமான வள்ளியம்மாள் நேற்று காலமானார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், அருமை சகோதரர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்பு மாமியார் மதிப்பிற்குரிய திருமதி அ.வள்ளியம்மாள் அவர்கள் 7.4.2021 அன்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனைப்படுகிறேன். அன்புச் சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தாயாரை
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியாரும், உத்தமபாளையம் ஞானம்மான் கோவில் தெரு அழகுபாண்டித்தேவர் மனைவியுமான வள்ளியம்மாள் நேற்று காலமானார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், அருமை சகோதரர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்பு மாமியார் மதிப்பிற்குரிய திருமதி அ.வள்ளியம்மாள் அவர்கள் 7.4.2021 அன்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனைப்படுகிறேன்.

அன்புச் சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த திருமதி வள்ளியம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.