×

தல-தளபதி அரசியல்! ரேட் இவ்வளவுதான்!

தங்களுக்கு பிடித்த நடிகர்கள் அணியும் டிரெஸ் முதல் ஷூ வரைக்கும் பாலோவ் செய்து தாங்களும் அது போலவே அணிவதில் அலாதியான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதில், நடிகர் விஜய் நேற்றைக்கு ஓட்டுப்போட வந்த சைக்கிளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? உச்சநட்சத்திரமான விஜய் ஓட்டுப்போட சைக்கிளில் வந்தது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டுவிட்டரிலும் இந்தியா டிரெண்டிங் ஆனது. வாக்குச்சாவடி தன் வீட்டுக்கு அருகே இருப்பதாலும், வாக்குச்சாவடி அருகே கார் நிறுத்தும் வசதி இல்லை என்பதாலும் எளிமையாக சென்று
 

ங்களுக்கு பிடித்த நடிகர்கள் அணியும் டிரெஸ் முதல் ஷூ வரைக்கும் பாலோவ் செய்து தாங்களும் அது போலவே அணிவதில் அலாதியான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதில், நடிகர் விஜய் நேற்றைக்கு ஓட்டுப்போட வந்த சைக்கிளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

உச்சநட்சத்திரமான விஜய் ஓட்டுப்போட சைக்கிளில் வந்தது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டுவிட்டரிலும் இந்தியா டிரெண்டிங் ஆனது.

வாக்குச்சாவடி தன் வீட்டுக்கு அருகே இருப்பதாலும், வாக்குச்சாவடி அருகே கார் நிறுத்தும் வசதி இல்லை என்பதாலும் எளிமையாக சென்று வாக்களித்து வரலாம் என்று சைக்கிளில் வந்தாலும், பெட்ரோல் -டீசல் விலையேற்றத்தினால் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க அவர் சைக்கிளில் வந்தார் என்று திமுகவினர் அள்ளிவிட, கறுப்பு -சிகப்பு கலரில் இருந்த அவரது சைக்கிள் கலரை வைத்தும் அவர் மறைமுகமாக திமுகவுக்கு ஓட்டு போட சொல்கிறார்கள் என்றும் பேச்சு எழுந்தது.

அஜித்குமார் மாஸ் அணிந்து வந்ததில் அவர் மாஸ்க் கறுப்பு கலர் என்றும், அதன் நாடா சிகப்பு கலர் என்பதாலும், தல -தளபதி இருவரும் சொல்லிவைத்துதான் இப்படி வந்திருக்கிறார்கள் என்று, விஜய்யின் சைக்கிளையும், அஜித்தின் மாஸ்க்கையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, விஜய் ஓட்டி வந்த சைக்கிள் பற்றி இணையங்களில் ரசிகர்கள் பலரும் தேடியதில், மான்ட்ரா (montra)நிறுவனத்தின் தயாரிப்பான அந்த சைக்கிள் கியர் அம்சன் கொண்டது. அந்த சைக்கிளின் விலை இந்திய மதிப்பில் 22 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள்.

சைக்கிளின் ரேட்டை பார்த்துவிட்டு இவ்வளவா? என்று வாய்பிளப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வளவுதானா? என்று பலரும் அந்த சைக்கிளை புக் செய்யவும் தயாராகிவிட்டார்கள்.