×

“தமிழிசையின் ஆலோசகர்களுக்கு கட்டில், மெத்தை; ரூ.24 லட்சம் அரசு பணம் வீண்” – ஆர்டிஐயில் வந்த அதிரவைக்கும் தகவல்!

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு படையெடுத்த காலக்கட்டம். அப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகே ஆட்சி கவிழ்ந்தது. விஷயம் அதுவல்ல. தமிழிசை ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் தனக்கு ஆலோசகர்களாக இரண்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்கள்
 

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு படையெடுத்த காலக்கட்டம். அப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகே ஆட்சி கவிழ்ந்தது. விஷயம் அதுவல்ல.

தமிழிசை ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் தனக்கு ஆலோசகர்களாக இரண்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்கள் இருவருக்கும் சட்டப்பேரவையிலேயே அறை ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே ஆளுநருக்கு தனி அரசுச் செயலர் இருக்கின்ற நிலையில் இவர்களின் நியமனம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அவர்களுக்கான அறை ஒதுக்கீடு, வாகன செலவு என பல லட்சம் வீணானதாகப் புகார் எழுந்தது.

உடனடியாக இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி தகவல் பெற்றிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “ஆளுநர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாத ஊதியமாக மொத்தம் 2.8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசுத் துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் தங்க அரசு இல்லம் 14.65 லட்சம் ரூபாயில் செலவு செய்து சரிசெய்து தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இல்லத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் 12 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்திருந்தனர். தற்போது மேலும் 5 லட்சம் ரூபாய் செலவிட்டு சீரமைத்துள்ளதுடன் வீட்டு உபயோகப் பொருட்களாக கட்டில், மெத்தை, சோபா, சேர் என சுமார் 10 லட்சம் ரூபாய்கு வாங்கப்பட்டு அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய செலவு உள்பட அனைத்துக்கும் சேர்த்து 24.05 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது” என்றார்.