×

கட்சிகளின் ‘காந்தி’கணக்கு!

அதிமுகவினர் பணப்படுவாடா செய்கிறார்கள் என்று திமுகவினரும், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்று அதிமுகவினரும் மாறி மாறி புகார் சொல்லி வருவதை பார்த்தாலே இரு தரப்பினரும் அள்ளி வீசி வருவது புரியும். எதிர்க்கட்சியினர் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை. அது தேறாது. நாம 200 ரூபாய் கொடுத்ததே போதும் என்று திருச்சி தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் பணப்பட்டுவாடா வீடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ராயபுரம்
 

திமுகவினர் பணப்படுவாடா செய்கிறார்கள் என்று திமுகவினரும், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்று அதிமுகவினரும் மாறி மாறி புகார் சொல்லி வருவதை பார்த்தாலே இரு தரப்பினரும் அள்ளி வீசி வருவது புரியும்.

எதிர்க்கட்சியினர் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை. அது தேறாது. நாம 200 ரூபாய் கொடுத்ததே போதும் என்று திருச்சி தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் பணப்பட்டுவாடா வீடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று ராயபுரம் தொகுதியின் வேட்பாளரும் அமைச்சருமான ஜெயக்குமார், கொளத்தூர், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிகம் பணப்பட்டுவாடா நடத்துகிறது திமுக. அதனால் அந்த மூன்று தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று புகார் கூறியிருக்கிறார்.

நாங்குனேரி தொகுதியில் அதிமுக சார்பில் தச்சை கணேசராஜாவும், அமமுக சார்பில் பரமசிவ ஐயப்பனும் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற காங்கிரசின் ரூபி மனோகரனே மீண்டும் களமிறங்கியுள்ளார். தொழிலதிபரான ரூபி மனோகரன் கடந்த முறையே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தந்தார். இதனால் இந்த முறையும் எதிர்பார்ப்பு இருந்தது. இதோ அதோ என கடைசிவரை இழுத்தடித்த அவர் கடைசியில் கையை விரித்துவிட்டார்.

அதேநேரம் கணேசராஜாவும், பரமசிவ ஐப்பனும் இடத்திற்கு தக்கபடி அசத்தி வருகின்றனர்.
இதேபோல அம்பை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையா ஏற்கனவே கோயில், குளம், நலத்திட்ட உதவிகள் என அள்ளியிறைத்து வாக்காளர்களை வசப்படுத்தி வைத்திருந்தார். திமுக வேட்பாளர் ஆவுடையப்பன், இசக்கிக்கு இருக்கும் ஆதரவைக் கண்டு மிரண்டுபோய், தனது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக வாக்குக்கு ஐநூறு தந்துள்ளார்.

போன தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்த ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு இந்தமுறை உஷாராக காந்தி நோட்டுக்களை களமிறக்கியுள்ளார்.

என்னதான் கட்சி செல்வாக்கு, கொள்கை, வாக்குறுதிகள், பிரச்சாரம் எல்லாம் இருந்தும் கடைசியில் காந்தி நோட்டுதான் ஓட்டுக்களை தீர்மானிக்கின்றன என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் வேட்பாளர்கள்.

காந்தி மட்டுமே ஓட்டுக்களை வாங்கித்தந்துவிடும் என்பதிலும் முழு நம்பிக்கை இல்லை அவர்களுக்கு. அதனால்தான் இந்த பிரச்சாரம், பொதுக்கூட்டம் , அறிவிப்பு வேலை எல்லாம்.

வேட்பாளர்கள் என்றைக்கு உண்மையானவர்களாக இருக்கிறார்களோ அன்றைக்குத்தான் வாக்காளர்களும் உண்மையானவர்களாக மாறுவார்கள். அதுவரைக்கும் பணம்தான் ஓரளவு ஓட்டுக்களை தீர்மானிக்கும் என்கிற நிலைதான் இருக்கிறது.