×

சசிகலாவின் நாற்காலிக்கு கீழே படுத்து கிடந்தவர் ஈபிஎஸ்.. உதயநிதியின் நாலாந்தர பேச்சு

தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ’’வளர்ச்சியே எங்கள் நோக்கம்! தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டுமே எங்கள் நோக்கம். காங்கிரஸ் மற்றும் திமுகவை பொறுத்தவரை வாரிசு
 

தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, ’’வளர்ச்சியே எங்கள் நோக்கம்! தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டுமே எங்கள் நோக்கம். காங்கிரஸ் மற்றும் திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் தான் நோக்கம். திமுகவில் சீனியர்கள் நிறைய பேர் இருக்க, அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறுக்குவழியில் சீட் பிடித்து இருக்கிறார் உதயநிதி’’ என்று கடுமையாக சாடினார்.

இதற்கு அவிநாசியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்தார் உதயநிதி. ‘’ கட்சியில் கட்சியில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பதவியை பிடித்தவர் மோடிதான்’’ என்றார் உதயநிதி.

அவர் மேலும், ‘’எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் குறுக்கு வழியில் தான் முதல்வரானார்’’ என்று சொல்லிவிட்டு, ஒரு போட்டோவை எடுத்துக் காட்டினார். அந்த போட்டோவில் சசிகலாவின் காலில் விழுந்து எடப்பாடி பழனிச்சாமி வணங்குவதாக இருந்தது. இந்த போட்டோவை காட்டி விட்டு, ’’இப்போது தெரிகிறதா எப்படி குறுக்கு வழியில் முதல்வரானார் பழனிச்சாமி என்று..’’ என சொல்லிவிட்டு,

’’அப்படிப்பட்ட முதல்வரை அருகில் வைத்துக்கொண்டு என்னை குறுக்கு வழியில் வந்தவன் என்று சொல்கிறார் மோடி. சசிகலாவின் நாற்காலிக்கு கீழே எப்படி படுத்து கிடக்கிறார் பாருங்கள் எடப்பாடி. நாற்காலிக்கு கீழே வெற்றி நடைபோடுகிறது தமிழகம்’’ என்று சொல்லி சிரித்தார் உதயநிதி.

கொஞ்சம் விட்டிருந்தால் சசிகலாவின் காலுக்குள் புகுந்திருப்பார் எடப்பாடி என்று ஆபாசமாக பேசி தனது கட்சியினரையே முகம் சுளிக்கும் படி செய்தவர் உதயநிதி. பெண்களைப் பற்றி இழிவாக ஆ. ராசா, திண்டுக்கல் ஐ. லியோனி பேசி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் மீண்டும் நாலாந்தரமாக பேசி அருவருப்பை ஏற்படுத்தியிருக்கிறார் உதயநிதி என்று அவிநாசியில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற திமுகவினரை முணுமுணுத்தனர்.