×

‘’நான் உங்க அமைச்சர் விஜயபாஸ்கரோட ரெண்டாவது மகள்..’’ டி.ஆர்.ஸ்டைலில் கலக்கல்

அதிமுக வேட்ப்விராலிமலை தொகுதியில் நிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது இரண்டு மகள்களும் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த தேர்தலிலும் அமைச்சரின் மகள்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். மக்களிடையே மகள்களின் பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்த தேர்தலிலும் தன் இரு மகளையும் பிரச்சாரம் செய்ய அனுமதித்திருக்கிறார் விஜயபாஸ்கர். ‘’இவரு எங்க அப்பான்னு சொல்ல முடியாது. ஏன்னா..எப்பவும் அவர் உங்க கூடவே இருக்குறதால அவர் உங்க வீட்டுப்பிள்ளை’’என்று மூத்த
 

அதிமுக வேட்ப்விராலிமலை தொகுதியில் நிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது இரண்டு மகள்களும் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த தேர்தலிலும் அமைச்சரின் மகள்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். மக்களிடையே மகள்களின் பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்த தேர்தலிலும் தன் இரு மகளையும் பிரச்சாரம் செய்ய அனுமதித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

‘’இவரு எங்க அப்பான்னு சொல்ல முடியாது. ஏன்னா..எப்பவும் அவர் உங்க கூடவே இருக்குறதால அவர் உங்க வீட்டுப்பிள்ளை’’என்று மூத்த மகள் பிரியதர்ஷினி அசத்தி வர,

‘’நான் உங்க அமைச்சர் விஜயபாஸ்கரோட ரெண்டாவது மகள்..’’என்று அசத்துகிறார் இளைய மகள்.

’’கஜா புயல்ன்னா கரெண்டா வருவரு; கரோனான்னா மாஸ்க்கா வருவாரு; பொங்கல்ன்னா சீரும் சிறப்பு வருவாரு. ’’ என்று அவர் டி.ஆர். ஸ்டைலில் கலக்கி வருகிறார்.

’’உங்களுக்கு ஏதும் ஆச்சுன்னா அவரு துடிச்சுப்போயிடுவாரு. உங்களுக்கு காது கேட்கலன்னா காது மெசினா வருவாரு; கண்னு தெரியலன்னா கண்ணாடியா வருவாரு’’என்று தொடர்ந்து தொகுதியில் கலக்கி வருகிறார்.