×

பிரேமலதாவுக்கு மீண்டும் கொரோனாவா? அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இன்றைக்கு மட்டும் 1,636 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 71ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9,746ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 972 பேர் ஆண்கள், 664பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜயகாந்த் கடந்த செப்டம்பர் மாதத்தில் லேசான கொரோனா அறிகுறியுடன்
 

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இன்றைக்கு மட்டும் 1,636 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 71ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9,746ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 972 பேர் ஆண்கள், 664பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஜயகாந்த் கடந்த செப்டம்பர் மாதத்தில் லேசான கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று வந்து அவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு அழைத்தனர். ஆனால், பிரேமலதா பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. பிரச்சாரத்தில் இருப்பதால் வரமுடியாது என்று தடலடியாக சொல்லிவிட்டார். தொண்டர்களும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், பிரேமலதாவுக்கு மீண்டும் கொரோனாவா? என்ற சலசலப்பு பிரச்சாரத்தில் எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.